சிலாபத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை உலங்குவானூர்தி மூலம் மீட்ட விமானப்படையினர்!
புதிய இணைப்பு
சிலாபம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக சிக்கிய ஒருவரை விமானப்படை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
அதன்படி, இரத்மலானை விமானப்படை தளத்தின் இல 04 படைப்பிரிவுக்குச் சொந்தமான பெல் - 412 உலங்குவானூர்தி மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
முதலாம்இணைப்பு
சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள 35 சிறுவர்களை உலங்குவானூர்தி மூலம் மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் 35 சிறுவர்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, குறித்த சிறுவர்கள் பெற்றோருடன் அசாதாரண சூழ்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது முதலாவது மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வேண்டுகோள்
அதன்படி, குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் நிலவி வந்த சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக சிலாபம் தெதுறு ஓயா பெருக்கெடுத்துள்ளது.
இதன்காரணமாக, சிலாபம் பகுதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து, தற்போது சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் 35 சிறுவர்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |