கச்சதீவு அந்தோனியார் திருவிழா! 4000 இலங்கையர்களுக்கு மாத்திரமே அனுமதி
Sri Lanka
India
Kachchatheevu
By Laksi
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இவ் ஆலய திருவிழாவானது அடுத்த மாதம் 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இம்முறை இலங்கையில் இருந்து 4000 பேரும் தமிழகத்தில் இருந்து 4000 பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவம் தொடர்பான அறிவிப்பு
கச்சதீவு திருவிழாவிற்கு வருகை தரவுள்ள தமிழக பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை வழங்க முடியும் என என ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து குறித்த திருவிழாவில் கலந்து கொள்வோர் அதற்காக மாவட்ட செயலகம் மற்றும் கடற்படையினரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்