தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு ஆட்சேர்ப்பு! விண்ணப்பம் குறித்து வெளியான தகவல்
தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் வெற்றிடமாகவுள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக, அரசியலமைப்புச் சபை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் “தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை” (Recommendation for Membership of the National Police Commission) என்ற தலைப்பிலான இணைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஜூலை 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை "பதில் பொதுச்செயலாளர், அரசியலமைப்புச் சபை - அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டை" என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், விண்ணப்பங்கள் அனுப்பப்படும் உறையின் மேல் இடது மூலையிலோ அல்லது மின்னஞ்சலின் பொருள் (Subject) வரியிலோ “Recommendation for Membership of the National Police Commission” என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை நிர்வாகத்தைக் கண்காணிப்பதிலும், அதன் பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த ஆணைக்குழுவிற்கு, தகுதியான வேட்பாளர்கள் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்தச் செயல்முறையின் நோக்கம் என்று அரசியலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்