அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை! நீதிமன்று உத்தரவு

Colombo Law and Order Kapila Chandrasena
By Jaso Sep 30, 2026 02:17 PM GMT
Report

 முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் பிணையாக செலுத்தியிருந்த பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (30) உத்தரவிட்டார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க சார்பாகப் பிணை நின்றநிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததை அடுத்தே நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது

  இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட பிரியங்கா நியோமாலி

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார்.

அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை! நீதிமன்று உத்தரவு | Aravinda De Silva And His Wife S Bail Bonds State

அதன்படி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, பிணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிணைப் பணத்தில் 20 மில்லியன் ரூபாயை இன்றைய தினமே நீதிமன்றத்தில் வைப்புச் செய்வதாகத் தெரிவித்தார்.

அதற்கு அனுமதியளித்த நீதவான், எஞ்சிய பிணைத் தொகையை வைப்புச் செய்வதற்கு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை

சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை

பிணையாளர்களுக்குச் சலுகை வழங்குமாறு கோரிக்கை

சந்தேகநபர் பிரியங்கா நியோமாலி தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாது தலைமறைவாக உள்ளதால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் சர்வதேச காவல்துறையினர் (Interpol) ஊடாக அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை! நீதிமன்று உத்தரவு | Aravinda De Silva And His Wife S Bail Bonds State

முன்னதாக, பிணையாளர்கள் சார்பில் மன்றில் கருத்தை முன்வைத்த சட்டத்தரணி, "சந்தேகநபரின் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டமை மற்றும் தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள தீவிர அச்சுறுத்தல் காரணமாக அவர் நாடு திரும்புவதற்கு அச்சப்படுகிறார். தற்போதைய சூழலில் சந்தேகநபர் பிணையாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை," எனக் கூறி, பிணையாளர்களுக்குச் சலுகை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு சென்றதுடன், கணவர் கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதவான், பிணையாளர்களுக்குச் சலுகை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்சவுக்கும் ஏற்கனவே சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தெரிவிக்கப்பட்டது. 

எனக்கு நினைவில்லை.. எனக்குத் தெரியாது.. எனக்கு எதுவுமே தெரியாது...சாட்சியமளிப்பில் பதறிய கோட்டாபய

எனக்கு நினைவில்லை.. எனக்குத் தெரியாது.. எனக்கு எதுவுமே தெரியாது...சாட்சியமளிப்பில் பதறிய கோட்டாபய

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019