இனி அமர முடியாது...! நாடாளுமன்றத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம் இன்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (07) நாடாமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கு தான் பொறுப்பல்ல
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாரைக் கொச்சைப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அர்ச்சுனா சபையில் தெரிவித்தார்.

"இனிமேலும் அவருக்கு அருகில் அமர்ந்து என்னால் சபையில் இருக்க முடியாது" என அவர் குறிப்பிட்டார்.
அவரது ஆசனம் மாற்றப்படாவிட்டால், சபை நடவடிக்கைகளின் போது அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற வரப்பிரசாதக் குழுவிலிருந்து உடனடியாக நீக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 10 மணி நேரம் முன்