வழிபாட்டு தலங்களில் உள்ள இராணுவத்தினரை அகற்ற வேண்டாம் - அதிபருக்கு கடிதமனுப்பிய மகாநாயக்க தேரர்கள்
தமிழர் தாயக பகுதி உட்பட நாட்டின் அனைத்து வழிபாட்டு தலங்களில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டாம் என மாகாநாயக்க தேரர்கள், அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கோரிக்கையை சிறிலங்கா அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில், ''மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பௌத்தர்கள் வாழும் வடக்கு, கிழக்கி மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பௌத்த தலங்களை போர் நடைபெற்ற காலத்தில் இருந்து இதுவரையும் பாதுகாத்து பராமரித்து வருவது பாதுகாப்பு படையினர் ஆவர்.
இராணுவ முகாம்கள்
அவர்களை இந்த வழிபாட்டு தலங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டாம்.
இந்த விகாரைகளை உயிர் தியாகம் செய்து பாதுகாத்த பௌத்த பிக்குகள் அந்த பிரதேசங்களுக்கு மிகப் பெரிய பொது சேவை செய்துள்ளனர்.
வறிய மக்கள் பெரும்பாலும் விகாரைகளால் போஷிக்கப்பட்டனர். இதற்கு பின்பலத்தை பாதுகாப்பு தரப்பினரே பெற்றுக்கொடுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம்கள் அவற்றின் பாதுகாப்புக்காக அப்படி இருப்பது நல்லது.''என கூறப்பட்டுள்ளது.