கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தில் நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
20,200 சிகரெட்டுகள் மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பணியில் இருந்த சுங்க அதிகாரிகளைக் கண்டு அஞ்சிய நிலையில் தனது உடமைகளை அங்கேயே கைவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
மேலும், அவரது உடமைகளில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 20,200 சிகரெட்டுகள் அடங்கிய 101 அட்டைப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |