ஐரோப்பிய நாடுகளில் நாளை அதிகாலை கோடை கால நேரமாற்றம்!
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடஅமெரிக்க நாடுகளில் நாளை (29.03.2026) அதிகாலை கோடைகால நேரமாற்றம் இடம்பெறவுள்ளது.
மார்ச் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை நடைபெறும் இந்த நேரமாற்றம் பிரித்தானிய உட்பட்ட ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் அதிகாலையில் பதிவாகவுள்ளது.
இதன் அடிப்படையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2:00 மணிக்கு கடிகாரங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டு 3:00 மணியாக மாற்றப்படும்.
பகல் நேரம் அதிகமாகும் வாய்ப்பு
நாளை மேற்கொள்ளப்படும் இந்த நேரமாற்றம் ஒக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த நேரமாற்றத்தின் காரணமாக நாளை அதிகாலை ஒருமணிநேரத்தூக்கம் குறைவடைவது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விடயமாக இருக்கும்.
எனினும் நாளை முதல் வசந்தகாலம் மற்றும் கோடை மாதங்களில் பகல் நேரம் அதிகமாகும் வாய்ப்புவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |