இடைநிறுத்தப்பட்ட இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி மீண்டும் ஆரம்பம்
புதிய இணைப்பு
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள போட்டியின் மேலதிக நாளான இன்று 4.20க்கு நடத்தப்பட்ட மைதான ஆய்வின் போது போட்டியை உடனடியாக ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆட்டத்தை இன்று மாலை தொடங்கலாம் என ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓவர்கள் எண்ணிக்கையில் குறைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் இன்று (11)பெய்யும் கனமழையால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டியின் ரிசர்வ் நாள் ஆட்டம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மோதிகொண்ட போது மழை காரணமாக போட்டி தள்ளிப்போடப்பட்டது.
தொடங்க முடியாத நிலை
இந்நிலையில், இந்தியா தனது இன்னிங்ஸை 147-2 இன்று இலங்கையின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்க தயாராய் இருந்தது.

எனினும், இடைவிடாத மழையால் போட்டியை சரியான நேரத்தில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அதே மைதானத்தில் நாளை இலங்கை அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.