யாழில் முடக்கப்படவுள்ள சந்தேகநபர்களின் சொத்துக்கள்! நீதிமன்றில் திர்மானம்
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாதத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாவிடில் அவர்களது சொத்துக்களை முடக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான நீதிமன்ற உத்தரவு காவல்துறையால் சந்தேக நபர்களின் வசிப்பிடங்களிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை பிரிவு
யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தலைமையக குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளின் நேரடி பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்ற கட்டளை காட்சிப்படுத்தப்பட்ட நாளில் இருந்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலோ யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்திலோ காலை 9 மணி முதல் 3 மணிக்கு இடையில் தோன்றுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டகோவையின் பிரகாரம் மன்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |