தலைநகர் கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்!
தலைநகர் கொழும்பில், கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரசித்த உணவகம் ஒன்றின் முன்னால் நேற்று (23.11.2025) இரவு இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உணவு வாங்க உணவகத்திற்கு வந்த ஒரு குழுவினருக்கும் உணவகத்தின் ஊழியர்களுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
வெளியான காணொளி
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
People are going crazy!!!
— Jamila Husain (@Jamz5251) November 23, 2025
Massive brawl breaks out outside Hotel De Plaza in Kollupitiya on Saturday night…
Several injured were rushed to hospital.. reason of the brawl unknown pic.twitter.com/tVfep93fi2
அதன்படி, குறித்த காணொளியில் சிலரின் மீது உணவகத்தின் ஊழியர்கள் தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |