முன்னாள் துணைவேந்தர் மீதான தாக்குதல் - பின்னணியில் யார்
மக்கள் விடுதலை முன்னணி, சோசலிச முன்னணியினரே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (13) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.
மோசமானமுறையில் தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன பல்கலைக்கழக மாணவர்களால் மோசமானமுறையில் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ள துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல ஆசியாவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட பேராசிரியராகவும் இருக்கிறார்.
இவ்வாறான நிலையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றம் அதிகூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.
முன்னரும் பேராசிரியர்கள் தாக்கப்பட்டு கொலை

இதற்கு முன்னரும் பேராசிரியர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 1987ஆம் ஆண்டு ஸ்டான்லி திலகரத்ன உள்ளிட்ட பேராசிரியர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதனால், நாட்டில் 87
ஆயிரம் பேர் கொலை
செய்யப்படும் நிலைமை
ஏற்பட்டிருந்தது.
இதுபோலவே தற்போது
பேராதனை பல்கலைக்கழக
தாக்குதல் சம்பவத்துடன்
ஜே.வி.பிக்கும் சோசலிச
முன்னணியினருக்கும்
பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத் தலைவர்களுக்கும்
தொடர்புள்ளது. இது
தொடர்பில் முறையான
விசாரணைகளை
மேற்கொண்டு உரிய
தண்டனை வழங்க
வேண்டும் என்றார்.