ஹரக் கட்டாவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்ட விசாரணை: சட்டமா அதிபரின் நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக சந்தேக நபரான ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் இன்று (20.8.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஹரக் கட்டா
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி, குறித்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதனால், ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தைப் பொறுத்து அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4