கோட்டாபயவுக்கு அவுஸ்திரேலியா வழங்கிய உறுதிமொழி!
இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கடல் துறைகளின் முன்னேற்றத்திற்கு அவுஸ்திரேலியா உதவும் என அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.
இன்று அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு
இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவுஸ்திரேலியா நல்ல புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் ஏனைய துறைகளுக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் டேவிட் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம்
இதேவேளை, கடற்படை மற்றும் சட்டவிரோத சட்டவிரோத குடியேற்றவாசிகள் சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
