பொதுமக்களே மிகுந்த அவதானம் - பாரிய மண்சரிவு அபாயம்
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படலாம் என சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |