பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு தடை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Manusha Nanayakkara
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Government
By Pakirathan
சுற்றுலா விசா மூலம் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களின் உரிமத்தை தடை செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தடை விதிக்கப்பட்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள்
இவ்வாறு சட்டத்தை மீறி சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, டொலர்கள் இன்றி உண்டியல் முறையில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சின் வரவு - செலவுத் திட்டம் மீதான குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி