அமெரிக்கா, கனடாவை பின்பற்றி இலங்கை யுத்தக் குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் - பிரித்தானிய அரசுக்கு அழுத்தம்

Sonnalum Kuttram
By Vanan Feb 11, 2023 02:30 PM GMT
Report

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ்(Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லீட்ஸ் கிழக்கு (Leeds East) நாடாளுமன்ற உறுப்பினர் றிச்சட் பர்கனுடன் ( Richard Burgon MP) உயர்மட்ட சந்திப்பு ஒன்று நேற்று(10) மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் The Sri Lanka Campaign for Peace and Justice(SLC) அமைப்பின் பிரசாரப் பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ்(Benjamin Kumar Morris), தொழில்கட்சிக்கான தமிழர்கள்(Tamils For Labour) அமைப்பின் தலைவர்சென் கந்தையா, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின்(ICPPG) பணிப்பாளர் அம்பிகை. க. செல்வகுமார் மற்றும் REDRSS அமைப்பின் சட்ட அலுவலர் நட்டாலியா குபிசச் (Natalia Kubesch) ஆகியோர் கலந்துகொண்டனர்.

யுத்தக் குற்றங்கள்

அமெரிக்கா, கனடாவை பின்பற்றி இலங்கை யுத்தக் குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் - பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் | Ban Sri Lanka War Criminals Pressure British Govt

கீத் குலசேகரம் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு(FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும்,  சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதை

அமெரிக்கா, கனடாவை பின்பற்றி இலங்கை யுத்தக் குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் - பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் | Ban Sri Lanka War Criminals Pressure British Govt

அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியினைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஏதுவாகவும் தொடர்ந்து இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்துவதற்கு ஏதுவாகவும் தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்குழு(APPGT) மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்களில்(APPG for Magnitsky Sanctions) இணைந்துசெயற்பட அழைப்புவிடுத்ததுடன், சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரும் சிறிய காணொளியினை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

SLC அமைப்பின் பிரசாரப் பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் உரையாற்றும் போது இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சவேந்திர சில்வா மீதான தடை முழுமையான தீர்வாக அமையாது என்ற போதிலும், நீதி நடவடிக்கைக்கு ஆரம்ப கட்டமாக இருக்கும் என்றும் தொடரும் சித்திரவதைகளை தடுக்க வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

Redress அமைப்பு சார்பாக நட்டாலியா உரையாற்றும் போது இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களிற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய சென்கந்தையா, சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், அமெரிக்கா,கனடா போன்ற நாடுகள் தடைசெய்த பின்னும் பிரித்தானியா தயங்குவது ஏன் என்றும் மேலும் பிரித்தானியா பொருளாதாரத்தில் தமிழர் பங்களிப்பின் முக்கியத்துவதையும் எடுத்துரைத்தார்.

 பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் சந்திப்பு

அமெரிக்கா, கனடாவை பின்பற்றி இலங்கை யுத்தக் குற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும் - பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் | Ban Sri Lanka War Criminals Pressure British Govt

அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.

அம்பிகை க. செல்வகுமார் தனது உரையின் போது கடந்த ஒரு சில மாதங்களிற்கு முன்னர் சித்திரவதைக்கு உள்ளாகியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ICPPG திரட்டிவைத்திருப்பதாகவும், வயது வேறுபாடு இன்றி தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கும், யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகியும் இனப்படுகொலை தொடருவதற்கான ஆதாரங்களையிம் திரட்டி ICPPG ஐ.நாவுக்கு வழங்க வருவதையும் குறிப்பிட்டார்.

சித்திரவதையில் தப்பிவந்தவர்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான கமல் வாசன், மற்றும் நிலக்ஐன் சிவலிங்கம் ஆகியோரும், ICPPG அமைப்பின் சார்பில் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருவதாகவும் கூறினார்.

அத்துடன் இரு அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக்களிலும் இணைய சம்மதித்ததுடன் தனது முழுமையான ஆதரவை தர உறுதியளித்தார்.

நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
நன்றி நவிலல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
நன்றி நவிலல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
நன்றி நவிலல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024