கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ விதிக்கப்பட்டது தடை
Bandaranaike International Airport
Matale
Sri Lanka
By Sumithiran
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பட்டங்கள் பறக்க விடுவதை தவிர்க்கும் வகையில்

எனவே பட்டங்கள் பறக்க விடுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒலிபெருக்கி வாகனங்கள் அப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ட்ரோன்களை பறக்கவிடுவதும்

விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்சுற்று வட்டபகுதியில் 300 அடி அல்லது அதற்கு மேல் பட்டங்களை பறக்கவிடுவதும், ட்ரோன்களை பறக்கவிடுவதும் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.