ஞானசாரதேரர் மறைந்திருக்க உதவிய வங்கி அதிகாரிக்கு நேர்ந்த கதி
மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலபொடஅத்தே ஞானசார தேரர் மறைந்திருக்க உதவியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரி ஒருவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
களனியைச் சேர்ந்த தமித் அஞ்சன வணிகசேகர என்ற சந்தேகநபரே கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேரரை ஏற்றிச்சென்ற வங்கி அதிகாரி
கொழும்பு குற்றப் பிரிவு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், சம்பந்தப்பட்ட தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்தும், இந்த சந்தேகநபர் தனது மோட்டார் வாகனத்தில் ராஜகிரியிலிருந்து எல்பிட்டிய பகுதிக்கு அவரை ஏற்றிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்தை மதிக்காமலும், நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமலும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றங்களைச் செய்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் இதுவரை நிறைவடையாததால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரியது. அதன்படி, விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |