பசிலுக்காக பதவி துறப்பது யார்?
basil
mahinda
meeting
parliament
slpp
By Vanan
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷவுக்காக யார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது பற்றிய இறுதி முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இதுகுறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை கேள்விக்குறியாகியுள்ளதாக தென்னிலங்கையில் பேசப்பட்டு வரும்நிலையில், நேற்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி