புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்!
trinco
valaichenai
batticalo
army arrest
By Kalaimathy
திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிவக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போதே, திருகோணமலை மாவட்டத்தின் இறக்கக்கண்டி பிரதேசத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 39 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன நோக்கத்துக்காக எங்கிருந்து இவ்வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்னறனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்