வியாழேந்திரனின் பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட நபர்- வெளியான அறிக்கையால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
murder
police
shooting
batticalo
viyalenthiran
By Kalaimathy
மட்டக்களப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரண விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்த போதும் மரண விசாரணை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் கையளிக்கப்பட்ட சடலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்ணீருடன் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி