உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புகையிரதக் கடவை- கண்டுகொள்ளாத திணைக்களம்!
மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் உள்ள புகையிரதக் கடவை கடந்த சில வாரங்களாக பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத கடவைப் பாதுகாவலர் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இதன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு புகையிரத திணைக்களம் புகையிரதக் கடவைக்கு ஒரு காவலரை இதுவரைக்கும் நியமிக்காமை பல உயிர்களுடன் விளையாடும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது எனவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பாரிய விபத்தோ அல்லது மக்களின் உயிர்களையோ பலி எடுப்பதற்கு முன் உடனடியாக கூழாவடி புகையிரத கடவைக்கு ஒரு காவலரை நியமிக்குமாறு அப்பிரதேசவாசிகளும் அதன் ஊடக பயணம் செய்யும் மக்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

