மட்டக்களப்பில் கோர விபத்து - பறிபோனது இளைஞனின் உயிர்
police
death
investigation
batticaloa accident
By Jaso
மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம்(09) இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. முகத்துவாரத்தில் இருந்து மட்டக்களப்பு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கருவேப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றும் இரு இளைஞர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.