அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்கள் கபளீகரம்
அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியில் புதிதாக அமையப்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெல்லாவெளியில் புதிதாக அமையப்பெற்றுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்களுக்கு ஒரு உதவியாக அமையும்.
அபிவிருத்தி என்ற போரிவையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலங்கள் மாறவேண்டும்.
இந்த நாட்டின் நிலமையை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம் அதற்கு எற்றாபோல் அனைவரும் வாழவும் பழகிகக் கொள்ளவும் வேண்டும்.
அபிவிருத்தி எனும் மாயைக்குள் எமது மக்கள் அகப்பட்டு, தற்போது எமது பிரதேசத்தைப் பறிகொடுக்கும் நிலமைக்குள் நாங்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.