மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 25 கொவிட் தொற்றாளர்கள் பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஓட்டமாவடி சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த 15 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய பரிசோதகர் பிரிவைச் சேர்ந்த 6 நபர்களும், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தலா இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளது. இதில் இரண்டு நபர்கள் மட்டக்களப்பு சுகாதார பகுதியைச் சேர்ந்தவர்களும் ஒருவர் காத்தான்குடி சுகாதார பிரிவு பகுதியைச் சேர்ந்தவரும் என தெரிவித்துள்ளார் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 1426 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் பத்தொன்பது மரணங்களும் சம்பவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தோற்று நோயாளர்கள் 171 ஆக பதிவாகியுள்ளதுடன் கடந்த மாதத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளர்கள் 165 எனவும் கடந்த வருடத்தில் 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.