கனடா செல்ல முயற்சித்த மட்டக்களப்பு இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
batticaloa
sri lanka
canada
air port
katunayaka
By Shalini
போலி விசாவைப் பயன்படுத்தி டுபாய் வழியாக கனடா செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் இன்று அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மட்டக்களப்பு, ஆரையம்பதியில் வசிக்கும் 24 வயதுடையவராவார்.
சந்தேகநபர் இலங்கையை விட்டு டுபாய்க்கு செல்ல திட்டமிட்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இருப்பினும், சந்தேகநபர் சமர்ப்பித்த கனேடிய விசாவில் உள்ள சிக்கல்கள் காரணமாக, விமான நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் சந்தேகநபரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
இதன்போது நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் கனேடிய விசா போலியானது என்பது தெரியவந்தது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்