சாதனையாளர் விருது பெற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர்
மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள மட்டக்களப்பு / மெதடிஸ்த மத்திய கல்லூரி (Bt/ Methodist Central College) அதிபர் ஆர். பஸ்கரன் (R. Baskar) கிழக்கு மாகாண ஆளுநரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாராட்டு விழாவானது சிசிலியா மகளிர் கல்லூரியில் ( St. Cecilia's Girls' College) இன்றையதினம் (22.11.2024) இடம்பெற்றுள்ளது.
சாதனையாளர் விருது
இதன்போது கல்லூரியின் அதிபரான ஆர். பஸ்கரனுக்கு ஆண்டின் சிறந்த அதிபருக்கான “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - மெதடிஸ்த மத்திய கல்லூரியானது மட்டக்களப்பு வலய கல்வி பிரிவுக்குட்பட்ட 100 நூறு பாடசாலைகளில் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் மிக சிறந்த பெறுபேற்றை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு பெறுமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வழிகாட்டியாக இருந்த அதிபர் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்