மேலும் ஒரு சாதனையை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானதில் அதிக சாதனைகளை படைத்து வருகிறார்.
அண்மையில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற டி20 போட்டியிலும் மேலும் ஒரு சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
நேற்று இரவு ஐசிசி டி20 துடுப்பாட்ட தரவரிசையை வெளியிட்டது. அதில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 883 புள்ளிகளிலிருந்து 908 புள்ளிகள் பெற்று, டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் காணப்படுகிறார்.
முதல் இந்திய வீரர்
ICC Rankings: Suryakumar Yadav destroyed ‘Virat’ record https://t.co/kIj3hgk9T0 pic.twitter.com/yIVZyG5nge
— CrickTale Official (@CricktaleO) January 13, 2023
சூர்யகுமா யாதவ் 908 புள்ளிகள் பெற்றதன் மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச புள்ளிகளாக இது பதிவானது.
இதற்கு முன்னதாக விராட் கோலி டி20யில் அதிகபட்சமாக 897 புள்ளிகளும், கேஎல் ராகுல் 854 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். சர்வதேச டி20 அரங்கில் இதுவரை 915 புள்ளிகள் வரை பெறப்பட்டுள்ளது.
அதை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் அஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் 900 புள்ளிகளை பெற்றுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
