பதவி பறிப்பு விவகாரம்! ஆத்திரத்தில் பிமல் ரத்நாயக்க
தான் தவறேதும் செய்திருந்தால் யார் வேண்டுமானாலும் விசாரணைக்குச் சென்று அவற்றை நிரூபிக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவத்துள்ளார்.
கொழும்பில் நேற்று(11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, பிமலிடம் இருந்த துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சு பொறுப்பு அனுர கருணாதிலகவுக்கு மாற்றப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் விளக்கம்
இந்த விடயம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பிமல் செய்த தவறுகளால் தான் குறித்த பதவி பறிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
எவ்வாறாயினும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பொறுப்பு பறிக்கப்படவில்லை எனவும் அரசாங்கத்தின் இலக்குகளை மிகவும் திறம்பட அடையும் வகையில் அவை மாற்றியமைக்கப்பட்டதாக அரசாங்கம் விளக்களித்துள்ளது.
ஜனாதிபதியின் நம்பிக்கை
அதன்படி, இது குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிமல், ஜனாதிபதி தன்னை நம்பும் வரை எதிர்க்கட்சிகளின் பேச்சுக்களால் தான் குழப்பமடையப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த விடயங்கள் குறித்த எதிர்க்கட்சிகளிடம் எந்த சான்றிதழ்களையும் பெற தனக்கு அவசியம் இல்லை என்றும் பிமல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
