ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக் காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஐரோப்பிய எல்லை கடக்கும் பயணிகளுக்கு இன்று அதிகாலை முதல் புதிய பதிவு நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் அல்லாதவர்கள் ஒன்றியத்தின் உறுப்புநாடுகளுக்குள் நுழைவதற்கு முன்னர் தங்கள் கடவுச்சீட்டுக்களின் விபரங்களையும் தமது கைரேகைகள் மற்றும் நிழற்படத்தையும் எல்லையில் பதிவு செய்ய வேண்டும்.
இதனால் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் பயணிகள் தமக்குரிய சோதனைகளுக்கு சற்று அதிக நேரத்தை எடுக்கவேண்டிய நிலை வந்துள்ளது.
Entry Exit System
EES அல்லது Entry Exit System எனப்படும் இந்த உள்நுழைவு வெளி அகல்வு நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல உறுப்பு நாடுகளுக்கும் உரிய நடைமுறையாகும்.
இன்று ஆரம்பித்த இந்த பரீட்சார்த்த நடைமுறை ஆறு மாதங்களுக்கு பின்னர் அதாவது ஏப்ரல் 2026 க்கு பின்னர் அறுதி நடைமுறையாக மாறும்.
இந்த செயல்முறை இலவசமான ஒரு செயன்முறை என்பதுடன் ஒரு முறை எடுக்கப்படும் இந்த பதிவு மூன்று வருட காலத்துக்கு செல்லுபடியாகும்.
அதாவது ஒருமுறை பதிவு வழங்கப்பட்டால் அதன்பின்னர் ஒன்றிய நாடுகளுக்கான் அடுத்தடுத்த பயணங்கள்; இலகுவாக மாறும் எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவப்பட்டுள்ள இடங்கள்
ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஷெங்கன் பகுதி நாடுகளுக்கும் இந்த உள்நுழைவு வெளி அகல்வு ( Entry Exit System) நடைமுறை அவசியம் என அறிவிக்கபட்டுள்ளது.
பிரித்தானியர்களை பொறுத்தவரை டோவர் துறைமுகம், ஃபோக்ஸ்ரோனில் உள்ள யூரோ ரனல் முனையம் மற்றும் பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்துக்கு செல்லும் யூரோஸ்டார் தொடருந்து பயணிகளுக்கு இது பொருந்தும்.
இதற்காக லண்டன் சென்ற் பன்கிராஸ் நிலையம் டோவர் துறைமுகம், ஃபோக்ஸ்ரோன் யூரோ ரனல் முனையம் உட்பட்ட இடங்களில் புதிய கட்டமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன.
எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டவிரோத குடியேறிகளை தடுக்கவும் இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கை உதவும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோல 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கைரேகை பதிவுகள் அவசியம் இல்லையென்றாலும் சிறார்களும் நிழற்படம் எடுக்கப்பட்டு அவர்களுக்கும் டிஜிற்றல் பதிவுகள் உருவாக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
