ட்ரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) உத்தரவை செயற்படுத்துவதனை அந்த நாட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதற்கமைய, அமெரிக்காவில் பிறந்த குழந்தை ஒன்றின் தாய் அல்லது தந்தை அமெரிக்க பிரஜையாக அல்லது சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இல்லாத நிலையில் குறித்த குழந்தையின் குடியுரிமையை அங்கீகரிப்பதனை மறுக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நீதிமன்றம்
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவை செயற்படுத்துவதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த உத்தரவை செயற்படுத்துவதனை இடைநிறுத்திய அமெரிக்க நீதிமன்றம், இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளது.
எனினும் , நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |