சீனாவிற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
China
World
By Beulah
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது, இந்நிலையில் மாகாண தலைநகரான ஜெங்ஜோவில் பனிப்புயலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பனியை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
நிலைமையை கருத்திற் கொண்டு ஜெங்ஜோ மற்றும் அன்யாங்கில் உள்ள ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் நடுநிலைப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாகாணம் முழுவதும் மொத்தம் 47 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 112 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை பனிப்புயல் தாக்கியுள்ளமையினால், அங்கும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி