காலி முகத்துவார கடற்கரையில் சடலம் ஒன்று மீட்பு!
Colombo
Sri Lanka
By pavan
காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றயதினம் கோட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம், மொட்டை தலை மற்றும் மெல்லிய, சாதாரண உடலமைப்பு கொண்டவர் என காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் அடையாளம்
எவ்வாறாயினும், இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடற்கரையில் மெரூன் நிற ஆடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் படி, சடலம் பிக்கு ஒருவருடையது என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்