களுதாவளை கடற்கரையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், செவ்வாய்கிழமை காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துள்ளதை அடுத்து அப்பகுதி கிராம சேவைகருக்கு மீனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிராம சேவைகர் ஸ்தலத்திற்கு உடன் விரைந்து சடலத்தைப் பார்வையிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன தலைமையிலாள பொலிஸ் குழுவினர் சடலத்தைப் பார்வையிட்டனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.




ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்