கிளிநொச்சியில் காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் நேற்றைய தினம்(14) காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்று(15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மாலையாளபுரம் புது ஜயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக 4 காவல்துறையினர் சென்றுள்ளனர்.
காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர்
இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் காவல்துறையினரைக் கண்டு குளத்திற்குள்ளாக தப்பி ஓடிய போது, அவர்களை காவல்துறையினர் தனித்தனியாக ஒவ்வொரு வழியாக துரத்திச் சென்றுள்ளனர்.
இறுதியில் மூன்று காவல்துறையினர் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
அவரை நேற்றைய தினம் இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சடலமாக மீட்பு
இந்த நிலையில் இன்று குளத்திற்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதலை மேற்கொண்டதில் காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த லியனகே சத்துரங்க(காவல்துறை கான்ஸ்டபில் )என்வரே இறந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.