டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
Sri Lanka Police
Accident
Death
By Thulsi
டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் கல்கமுவ காவல் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார். இதன்போது குறித்த டிராக்டரின் சக்கரத்தில் சிறுவன் சிக்கியுள்ளார்.

காயமடைந்த சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்
உயிரிழந்தவர் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |