இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியா தீவிர முடிவு! விதிக்கப்பட்டது தடை
காசாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலிய மாணவர்கள் லண்டனில் உள்ள பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
பிரித்தானியா நீண்ட காலமாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி என்றாலும், சமீபத்தில் காசா போர் தொடர்பாக அழுத்தம் கொடுக்க முயற்சி செய்து வருகிறது.
எவ்வாறாயினும், இந்தத் தீர்மானம் குறித்து இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
காசா மீதான தாக்குதல்
காசா மீதான தாக்குதல்கள் குறைக்கப்படாவிட்டால், பாலஸ்தீனை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் இஸ்ரேலிய மாணவர்கள் றோயல் பாதுகாப்புக் கல்லூரியில் சேர அனுமதி கிடைக்காது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காசா நகரை முழுமையாக கைப்பற்றத் திட்டமிட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல் அரசின் முடிவு
இதேவேளை, காசா பகுதியில் தாக்குதலை அதிகரிக்கின்ற இஸ்ரேல் அரசின் முடிவு தவறானது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் காசா விரிவாக்கம் தொடர்பான விவகாரத்தால், பிரித்தானியா தனது மிகப்பெரிய ஆயுதக் கண்காட்சியில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகளைத் தடை செய்திருந்தது.
எனினும், இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அந்தக் கண்காட்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்கதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
