விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை! சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
srilanka
international
british
bandaranaike
college
By Vasanth
சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக இன்றைய தினம் சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிகளுக்குள் சுற்றுலாத்துறையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொவிட் தொற்று நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால் பயண முகவர் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி