வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவல சேவைக்கு முட்டுக்கட்டை போடும் தரகர்கள்

Sonnalum Kuttram
By Independent Writer Jul 07, 2026 08:41 AM GMT
Report
Courtesy: Nayan

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ​

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர்,கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தனது 10 வயதிற்குட்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்து கடவுச்சீட்டு தர ரூ. 250,000 பணம் கோரப்பட்டுள்ளது. ​

எனினும், அந்தத் தாய் எவ்வித மேலதிகப் பணத்தையும் வழங்க மறுத்து, அதே விண்ணப்பங்களுடன் கொழும்பில் உள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு எவ்வித குறைபாடுகளும் இன்றி, எவ்வித மேலதிகக் கட்டணமும் இன்றி, ஒரே நாளில் அவசர சேவையின் கீழ் தனது இரு பிள்ளைகளுக்கும் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுள்ளார். ​

இதே போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், "வவுனியா அலுவலகத்தில் இவ்வாறான முறைகேடுகள் திட்டமிட்டே நடைபெறுகின்றன.

வெளிநாடு செல்வதற்காக அவசரமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் அப்பாவி மக்களிடம் இலஞ்சம் கோரப்படுகிறது.

சிலர் கொழும்பு செல்வதற்கான அலைச்சல்களைத் தவிர்க்கும் பொருட்டு, வவுனியா அலுவலகத்தில் கேட்கும் பணத்தைக் கட்டாயத்தின் பேரில் செலுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுச் செல்கின்றனர்," எனத் தெரிவிக்கின்றனர். ​

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் இத்தகைய முறைகேடுகளையும், இடைத்தரகர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தவும், உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி முறையான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு

காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை குறித்து விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026