சொத்து தகராறு : தம்பியை கொலை செய்த அண்ணன்
நிலத்தகராறு காரணமாக நேற்று (12) கலஹா, நீலம்ப யோகலெச்சுமி தோட்டத்தில் அண்ணன் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
தந்தைக்கு சொந்தமான நிலத்தை விற்றுவிட்டதாக
இந்நிலையில், கடந்த வியாழன் இரவு கருணாநிதியின் வீட்டுக்கு வந்த அவர், திருமணமாகாத தம்பி தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை விற்றுவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் தலையிட்டு மோதலை சமரசம் செய்தபோதிலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
இரவு நேர தகராறுக்கு பின், நேற்று அதிகாலை 2 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சென்று பார்த்தவேளை காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், கருணாநிதியின் உடல் பிணமாக கிடந்தது.
அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள்
தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அக்கம்பக்கத்தினர் பிடித்து கலஹா காவல்துறையில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |