தொலைபேசியால் வந்த வினை! 11 வயது சகோதரியை கொலைச் செய்து நீர் தொட்டிக்குள் வீசிய சகோதரன்

Sri Lanka Police Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples
By Bavan May 30, 2026 03:23 PM GMT
Report

கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் 11 வயது சகோதரியை அவரது சகோதரன்  கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு - ஏறாவூர் காவல் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீட்டில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் சகோதரனே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா

விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இன்று(30.05.2026) குறித்த சிறுவன் ஏறாவூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தொலைபேசியால் வந்த வினை! 11 வயது சகோதரியை கொலைச் செய்து நீர் தொட்டிக்குள் வீசிய சகோதரன் | Brother Who Killed Sister For A Mobile Phone

கடந்த வியாழக்கிழமை(28.05.2026) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா, என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன், தந்தையின் பராமரிப்பில் 14 வயது சிறுவனும், 11 வயது சிறுமியும் வளர்ந்து வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தந்தை வேலைக்காக வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது தண்ணீர் தொட்டிக்குள் குறித்த சிறுமி சடலமாக கிடந்து, மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில், குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெசாக் ஒளியும் பௌத்த துறவியின் பாலியல் குற்றச்சாட்டு தீர்ப்பும்!

வெசாக் ஒளியும் பௌத்த துறவியின் பாலியல் குற்றச்சாட்டு தீர்ப்பும்!

பிள்ளைகளை  தேடிய தந்தை

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சிறுமி தான் வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்தக் காரணத்தினால் சகோதரனுக்கும், சிறுமிக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சகோதரியின் கழுத்தை நெரித்ததையடுத்து அந்த இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர், சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய வேளையில், சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் கைது!

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் கைது!

சிறுவன் கைது

இந்நிலையில், சிறுமி உயிரிழப்பு தொடர்பில், 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தான் சகோதரியை கொலை செய்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026