மட்டக்களப்பில் கோரம் : கணவனின் கத்திகுத்து தாக்குதலில் மனைவி பலி
மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது
தினமும் மதுபானம் அருந்திவிட்டு ரகளை
கூலி தொழிலாளியான கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்

இந்நிலையில் சம்பவ தினமான இன்று மனைவியின் கையடக்க தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து பணத்தை எடுத்து அதற்கு மதுபானம் வாங்கி குடித்துவிட்டு வீடு வந்துள்ளார்.
கத்திகுத்து தாக்குதல்
இதையடுத்து கணவன், மனைவிக்கிடையே நீண்ட நேரம் தகராறு இடம்பெற்று வந்துள்ள நிலையில் மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சித்தாண்டி கலைமகள் வீதியில் உள்ள கணவனின் தாயாரான மாமியாரிடம் கணவனை பற்றி முறையிடுவதற்கு அங்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பின் தொடர்ந்து சென்ற கணவர் தனது தாயார் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து காவ்துறை அவசர சேவை 119 ற்கு அறிவித்ததையடுத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்தாக காவல்துறையின்ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |