திருகோணமலையில் பழைய காவல் நிலையக் காணியில் 40 தோட்டாக்கள் மீட்பு!
திருகோணமலையில் ஒரு தொகை தோட்டாக்கள் (40 வரை) மீட்கப்பட்டுள்ளன.
தம்பலகாமம் பழைய காவல் நிலையக் காணிக்குள் காணியைச் சுத்தம் செய்யும்போது இவை மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்துத் தம்பலகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்துத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதிரடிப் படையினர்
இதையடுத்து நேற்றைய தினம் (19-06-2026) குறித்த காணிக்குள் விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்னும் இது போன்ற ஆயுதப் பொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பழைய காவல் நிலையத்தை விட்டுப் புதிய கட்டிடத்திற்கு இடம்மாறி ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில் காணியைத் துப்புரவு செய்யும்போது சப்பாத்து அணியும் காலுறையில் (Socks) சுற்றி வைக்கப்பட்ட நிலையில் குறித்த தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




