வீதியை விட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து - ஒருவர் பலி: சாரதி அதிரடியாக கைது
மன்னார் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பள்ளமடுப் பகுதியில், மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 49 வயதுடைய, பல்லவராயன்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |