அதிவேக நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Highways In Sri Lanka
By Dilakshan
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து பகுதியளவு எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீ விபத்தானது, தொடங்கொட பகுதியில் இன்று (28) நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பேருந்தின் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம்
தனியார் சொகுசு பேருந்து கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், தீ விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே அதில் இருந்துள்ளதுடன், இருவரும் காயமின்றி தப்பியுள்ளனர்.
இதன்படி, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் மேலும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி