இலங்கைக்கான பேருந்து இறக்குமதி குறித்து வெளியான தகவல்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வாகனங்களின் தரநிலைகள்
பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா? என்பதை ஆராயும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பேருந்து சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
