கோரவிபத்தில் பலியான முச்சக்கரவண்டி சாரதி
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்,முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய, மித்தெனிய வீதியில் கும்பகோதர பிரதேசத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் மூவர் காயம்

அத்துடன் இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் வந்த மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியான கட்டுவன, புரந்தயா பகுதியைச் சேர்ந்த ஜி.ஏ.ரஞ்சித் என்ற 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை

பேருந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். எம்பிலிபிட்டிய காவல்துறை போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.