பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Bus Strike
By Dilakshan
டீசல் விலை அதிரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்போது பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
விலை உயர்த்த நடவடிக்கை
நேற்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலையை 62 ரூபாவாலும் உயர்த்த சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நடவடிக்கை எடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி