ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மீது மூன்றாவது முறையாக தாக்குதல்
ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளதாக ஈரானிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, இந்தத் தாக்குதலால் எந்த உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும், எந்தவொரு தொழில்நுட்ப இடையூறுகளும் பதிவாகவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
அந்த மின் நிலையம் தற்போது "செயல்பாட்டில் உள்ளது மற்றும் கணிசமான அளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டுள்ளது என்றும் AEOI சுட்டிக்காட்டியுள்ளது.
இரு முறை தாக்குதல்
இந்த நிலையத்திற்கு ஏற்படும் எந்தவொரு சேதமும், பிராந்தியத்திற்கு ஈடுசெய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கடுமையான அணு விபத்திற்கு வழிவகுக்கும் என்று ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தத் தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இதேவேளை மார்ச் மாதம் 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் அதே அணுமின் நிலையம் தாக்கப்பட்டதாகவும் ஆனால் அந்தச் சம்பவங்களிலும் எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |